Tuesday, April 21, 2020

வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய் என்ன காரணம்?

ஓரேநாளில் 300% வீழ்ச்சி.. வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்..!

கொரோனா பாதிப்பின் காரணமாகச் சர்வதேச நிதியியல் சந்தை மிகவும் மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அமெரிக்கக் கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத வகையில் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய் என்ன காரணம்?

வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய் என்ன காரணம்? 



 Book Trial for 2 days - Whatsapp 9841986753
Currency USDINR Tips 
Commodity CRUDEOIL Tips 
 Index Nifty and Stock Options Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

ஆம், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் பியூச்சர் செவ்வாய்க்கிழமை உடன் முடிவடையும் நிலையில், இதன் மதிப்பு ஒரு பேரலுக்கு -37.63 டாலராகக் குறைந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

300 சதவீத வீழ்ச்சி WTI கச்சா எண்ணெய் கடந்த மாதம் ஒரு பேரல் 20 முதல் 22 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைய வர்த்தகம் துவங்கி சில மணி நேரங்களில் WTI கச்சா எண்ணெய் விலை அதிகப்படியாக 310 சதவீதம் சரிந்து 56.720 டாலர் விலை குறைந்து. ஒரு பேரல் -38.450 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கக் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் எப்போதும் இல்லாத வகையில் பியூச்சர் மதிப்பு மிகப்பெரிய விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம் ?

 உலக நாடுகளில் கொரோனா பாதிப்பும் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் தேவை இன்னும் அதிகரிக்காமல் இருக்கும் அதேவேளையில் உலக நாடுகள் இதுநாள் வரையில் கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்கிச் சேமித்துவிட்ட நிலையில் இனியும் வாங்கிச் சேமிக்கப் போது சேமிப்புக் கிடங்குகள் இல்லாத நிலையில் இனி வரும் நாடுகளில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் எனக் கணிப்புகள் வெளியானது. இதன் எதிரொலியாகவே மே மாத பியூச்சர் மதிப்பு தாறுமாறாகக் குறைந்துள்ளது.

அமெரிக்கச் சந்தை இதற்கு ஏற்றார் போல் அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் காரணத்தால் தொழிற்துறை மற்றும் பொருளாதார நிகழ்வுகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் WTI கச்சா எண்ணெய் தேவை உள்நாட்டிலேயே அதிகளவில் குறைந்துள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் ஏற்கனவே அரபு நாடுகள் அதிகளவில் கச்சா எண்ணெய் இருப்பு அதிகமாகவும், அதிகத் தள்ளுபடி விலைில் விற்பனை செய்யும் காரணத்தால் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க எந்த நாடும் முன்வரவில்லை. இதுவும் WTI பியூச்சர் விலையைப் பாதித்துள்ளது.

உற்பத்தி இந்நிலையில் அடுத்த சில நாட்களில் உலகின் அனைத்து கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி அளவை குறைப்பது மட்டும் அல்லாமல் செலவுகளைக் குறைப்பதில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாகச் சுமார் 131 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கச்சா எண்ணெய் விலை மைனஸ் 37 டாலரா?

சரிவு விவரம் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் என்கிற WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, New York Mercantile Exchange (NYMEX) சந்தையில், தாறுமாறாக விலை சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர்ஸின் விலை மைனஸ் 37 டாலரைத் தொட்டு, வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

மைனஸ் 37 டாலர் பொதுவாக ஒரு பொருளை 10 ரூபாய், 20 ரூபாய் என, நாம் தான் விலை கொடுத்து வாங்குவோம். அந்த பொருளுக்கு -10 ரூபாய் என்றால் என்ன பொருள்? அதாவது பொருளை வாங்கிச் செல்ல, பொருளை விற்கும் வியாபாரி பணம் தருகிறார் என பொருள்படும். அப்படி ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய்யை எடுத்துச் செல்ல வியாபாரிகள் 37 டாலர் கொடுத்து இருக்கிறார்கள்.

இடைவெளி மே 2020 மாத காண்டிராக்டுக்கும், அடுத்த ஜூன் 2020 மாத காண்டிராக்டுக்கும் மத்தியில் இருக்கும் விலை இடைவெளி, ஒரு பேரலுக்கு சுமார் 20 டாலராக இருக்கிறதாம். இது வரலாறு காணாத பெரிய இடைவெளியாம். சரி, இப்படி திடீரென கச்சா எண்ணெய் விலை தரை தட்டக் காரணம் என்ன? ஏன் -37 டாலர் வரை WTI கச்சா எண்ணெய் விலை சரிந்தது?

கொரோனா வைரஸ் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் கொரோனா வைரஸால் மக்கள் போக்குவரத்து பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் தொடங்கி விமான எரிபொருளான ஏர் டர்பைன் ஃப்யூயல் (Air Turbine Fuel) வரை எல்லா எரிபொருள் வியாபாரமும் தேங்கிவிட்டது. கச்சா எண்ணெய்க்கான டிமாண்டே இல்லை

இடம் இல்லை இப்படி பயன்படுத்தப்படாத கச்சா எண்ணெய், அமெரிக்க எனர்ஜி கம்பெனிகளைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்க எனர்ஜி கம்பெனிகளும் தங்களால் முடிந்த வரை கச்சா எண்ணெய்களை வாங்கிக் குவித்து வைத்து விட்டார்கள். இதற்கு மேல் கச்சா எண்ணெய்யை வாங்கி வைக்க ஸ்டோரேஜ் இடங்கள் இல்லை. எனவே WTI கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸின் விலை தரை தட்டத் தொடங்கிவிட்டது.