Wednesday, October 30, 2019

புதிய உயரத்தில் சென்செக்ஸ்..! 40,500 புள்ளிகளைத் தொடுமா..? 30/10/2019

புதிய உயரத்தில் சென்செக்ஸ்..! 40,500 புள்ளிகளைத் தொடுமா..? 30/10/2019

Join Whatsapp 9094047040 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753


புதிய உயரத்தில் சென்செக்ஸ்..! 40,500 புள்ளிகளைத் தொடுமா..?

ஒட்டு மொத்த சென்செக்ஸ்ஸையும் தூக்கி நிறுத்தும் விதமாக நம்மிடம் எந்த ஒரு பெரிய மேக்ரோ பொருளாதார செய்திகளோ அல்லது உலக பொருளாதார காரணிகளொ இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில், பல பங்குகளின் விலை, இன்று சென்செக்ஸை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. உதாரணமாக ஐடிசி 3.04%, எஸ்பிஐ 2.71%, இன்ஃபோசிஸ் 2.41%, பார்தி ஏர்டெல் 2.39%, டிசிஎஸ் 1.5%, என சில பங்குகள் நல்ல விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் அதிக வெயிட்டேஜ் கொண்ட டாப் 5 பங்குகளில் ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் டி எஃப் சி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய ஐந்து பங்குகளில் ஹெச் டி எஃப் சி தவிர, மற்ற நான்கு பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

நேற்று மாலை சென்செக்ஸ் 39,805 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,055 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆக வர்த்தகம் தொடங்கும் போதே சுமார் 250 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 40,121 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து, 290 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 32 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பி.எஸ்.இ-யில் 2,405 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,284 பங்குகள் ஏற்றத்திலும், 949 பங்குகள் இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. மொத்தம் 2,405 பங்குகளில் 68 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 105 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா, பார்மா, ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் மட்டும் இறாக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பொதுத் துறை வங்கிகள், ஐடி போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் மேலே ஏற்றிக் கொண்டு இருக்கின்றன. ஐடிசி, எஸ்பிஐ, ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பிரிட்டானியா, சிப்லா, யூ பி எல், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், கோல் இந்தியா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதே போக்கில் போனால் சென்செக்ஸ் கூடிய விரைவில் 40,500-ஐத் தொட்டு வர்த்தகமாகலாம்.

 Our Blog Information Learning purpose only
                        (Paper Trading Practice for Currency, Equity, Commodity Segment)
Register For Free Equity Tips Trial: http://rupeedesk.in/rupeedeskfree-calls

Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753
Free Commodity Tips : Join our Whatsapp No : 9094047040

##freecommoditytips #freecommodity #freegoldtips #crudeoil #freecoppertips 
#coppertips #crudeoiltips #freecrudeoil #mcxgoldtips #mcxsilvertips
#mcxcoppertips #mcxaluminiumtips #mcxzinctips #mcxcrudeoiltips#mcxnaturalgas
#mcxleadtips #mcxnickeltips #free_commodity_tips #mcxmenthaoiltip